முக்கிய செய்திகள் ஏமனில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் - மார்க் லோகத்

ஏமனில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் - மார்க் லோகத்

அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் என ஐ.நாவின் மனித உரிமைகள் தலைவர் மார்க் லோகத் தெரிவித்துள்ளார். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே நீடித்து வரும் சண்டை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. தற்போது தலைநகர் சனா உட்பட பெரும்பான்மை பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் வசம் உள்ளன. அங்கு நிலவி வரும் கடும் போரால் உணவு பொருட்களின் வரத்து குறைந்திருப்பதால் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு போர் நிறுத்த நடவடிக்கையில் ஐ.நா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் சண்டை நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுவீடனில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஐ.நாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மார்க் லோகத் வலியுறுத்தியுள்ளார். சனா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துறைமுக நகரமான ஹொதைதாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தால் தான் தொண்டு நிறுவனங்களின் உதவி பணிகள் எளிதாக நடக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்....

பிந்திய செய்திகள்

30-11-2018

ஏமனில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு அனைத்து தரப்பினரும் வலுவான ஒத்துழைப்பு தர வேண்டும் - மார்க் லோகத்

28-11-2018

சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்!

28-11-2018

உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோசென்கோ தெரிவித்து இருக்கிறார்!

27-11-2018

ஸ்டிராபெரி பழத்துக்குள் ஊசி இருந்தது கண்டுபிடிப்பு

27-11-2018

வீட்டை சுத்தம் செய்ததுக்கெல்லாம் பரிசு..!

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

24-11-2018

தாய்வானில் ஒரே பாலின திருமனத்திற்கான வாக்கெடுப்பு!

24-11-2018

காலநிலை மாற்றம் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகள் எச்சரிக்கை

25-11-2018

பாரிஸில் அதிக பணம் கேட்ட போலி டாக்ஸி ட்ரைவர் சிறை!

25-11-2018

தாய்வான் தொழிலாளர்களை இஸ்ரேல் மறந்துவிட்டது:

25-11-2018

பெனின் கலைப்படைப்புக்கள்:

மேலும் பிரதான செய்திகளுக்கு

உலகம்

மேலும் உலகம் செய்திகளுக்கு