சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்!

Print lankayarl.com in உலகம்

பெய்ஜிங்: வடக்கு சீனாவில் இயங்கி வந்த தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயமடைந்தனர்.

பெய்ஜிங்கில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷாங்ஜாகோ நகரில் இயங்கி வந்த ஹெபே ஷென்குவா கெமிக்கல் ஆலையில் இந்த விபத்து நடந்துள்ளது. நள்ளிரவில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
பணியில் இருந்த தொழிலாளர்களில் 22 பேர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயத்துடன் துடித்த பலர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் ஆலை நாசமாகி, கரும்புகையாக வெளியேறி வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.