பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக ஜெய்ர் பொல்சொனாரோ

Print lankayarl.com in உலகம்

பிரேஸிலில் கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக, இன்று பதவியேற்கவுள்ளார்.

இடதுசாரி தொழிலாளர் கட்சியின் பெர்ணான்டோ ஹட்டாட்டை எதிர்த்து போட்டியிடட 63 வயதான ஜெய்ர் பொல்சொனாரோ, சிறு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேவேளை, ஊழலை ஒழிப்பதாகவும் நாட்டில் குற்றங்களை இல்லாதொழிப்பதாகவும் பொல்சொனாரோ தமது தேர்தல் பிரசாரங்களில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.