டிரம்ப்கு கடிதமெழுதிய விளாடிமிர் புதின்

Print lankayarl.com in உலகம்

அமெரிக்கா ரஷ்யா இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆர்ஜென்டினாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் புதினுடனான சந்திப்பை டிரம்ப் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஷ்யா-அமெரிக்கா இடையேயான நல்லுறவு சர்வதேச பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் உறுதிபடுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் விரிவான பேச்சு நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது” என புதின் குறிப்பிட்டுள்ளார்.