நியூசிலாந்தில் 145 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன!

Print lankayarl.com in உலகம்

நியூசிலாந்தில் ஸ்ரீவேர்ட் தீவில் உள்ள ஒரு கடற்கரையில் சிக்கி 145 திமிங்கலங்கள் இறந்துள்ளன.

இந்த திமிங்கலங்கள் மேசன் குடாவில் ஒரு கடற்கரையில் பரவிக்கிடந்த நிலையில் சனிக்கிழமை அன்று கடற்கரையில் நடந்து சென்றவர்கள் கண்டுள்ளனர்.

அவற்றில் அரைவாசி திமிங்கலங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் மிகுதி திமிங்கலங்களை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாரத்திலேயே வெவ்வேறு சம்பவங்களில் 12 பிக்மி திமிங்கலங்களும் 1 ஸ்பேர்ம் திமிங்கலமும் இறந்த நிலையில் நியூசிலாந்து கடற்கரையில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.