உகாண்டாவில் படகு விபத்து: 35 பேர் பலி, பலரைக் காணவில்லை!

Print lankayarl.com in உலகம்

கடந்த சனிக்கிழமை உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியில் எற்பட்ட படகு விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர் என்று உகாண்டா பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

படகின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் அது கவிழ்ந்த போது அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

26 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். மிகுதி பயணிகளை தேடும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது என்று இராணுவத் தளபதி கொல்.டியோ அகிகி அசிம்வே தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

குறித்த படகானது தனியாருடையது. அது இன்னும் பதிவுசெய்யப்படவில்லை. உரிமம் கூட இல்லாதது என்று பாதுகாப்பு சேவைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து நடந்த போது காலநிலை மிகவும் மோசமாக இருந்தது என்று உகாண்டா பொலிஸ் அதிகாரி பற்றிக் ஒன்யாங்கோ குறிப்பிட்டுள்ளார்.