வீட்டை சுத்தம் செய்ததுக்கெல்லாம் பரிசு..!

Print lankayarl.com in உலகம்

தாங்க்ஸ் கிவ்விங் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது தம்பதியினருக்கு கிடைத்த பரிசு....

கிறிஸ்துவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தாங்க்ஸ் கிவ்விங். 2018 ஆம் ஆண்டு ‘தாங்க்ஸ் கிவ்விங் ' தினத்திற்க்காக அமெரிக்காவில் உள்ள லுசியானா நகரத்தை சேர்ந்த ஹாரோல்டு மற்றும் டீனா இகேரென்பேர்கு தம்பதியனர்க்கு சற்றும் எதிர்பாராத விதத்தில் பிரமாண்ட பரிசு கிடைத்துள்ளது.

ஹாரோல்டு மற்றும் டீனா இகேரென்பேர்கு தொலைந்து நீண்டநாளாக லாட்டரிடிக்கெட் தான் அந்த பரிசு. இந்த தம்பதியனரிடம் கிடைத்த லாட்டரி டிக்கெட் மிகவும் மோசமான நிலையில் கிடைத்தாலும் அதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 12 கோடி. பரிசைப் பெற வேண்டிய கெடு இன்னும் இரண்டு வாரத்தில் முடிய இருக்கும் நிலையில் தாங்க்ஸ் கிவ்விங் தித்தி முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்த போது அவர்களுக்கு அந்த லாட்டரி டிக்கெட் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

இது குறித்து டீனா மற்றும் லூசியான கூறுகையில், ‘தாங்க்ஸ் கிவ்விங் தினத்திற்க்கு எங்களது குடும்பம் ஒன்றினைய முடிவெடித்த நிலையில் நாங்கள் வீட்டை சுத்தம் செய்ய முடிவெடுத்தோம். அத்துடன் வேறு சில லாட்டரி டிக்கெட்டும் கிடைத்தன'' என்று தெரிவித்துள்ளார். டிக்கெட் கிடைத்தவுடன் லாட்டரி நிறுவனத்தின் இணையதளத்திற்க்கு சென்று தனது டிக்கெட்டுக்கு ஏதாவது பரிசு கிடைக்குமா என பார்த்த டீனாவுக்கு, அனைத்து எண்களும் சரியாக மேட்ச் ஆனதால் பரிசுத்தொகையை தட்டிச் சென்றனர்.

மேலும் வென்ற பணத்தை பணி ஓய்வு பெறும் காலத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளந்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.