குண்டுவெடிப்பு குற்றவாளியை விடுதலை செய்த இந்தோனேஷியா

Print lankayarl.com in உலகம்

இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அபுபக்கர் பஷீர் என்பவரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. பாலி நகரில் கடந்த 2002ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.

இதில் 202 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அபுபக்கர் பஷீர் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரை விடுதலை செய்ய இந்தோனேஷிய அதிபர் உத்தரவிட்டார். பஷீரின் உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறினாலும், அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டே ஆன்மீகத் தலைவரான பஷீர் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.