கொலம்பியாவில் கார்குண்டு தாக்குதல்:21 பேர் பலி

Print lankayarl.com in உலகம்

கொலம்பியாவின் பொகோடாவில் (Bogotá) நகரில் பொலிஸ் அகாடமி ஒன்றுக்கு இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த காரின் சாரதி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 57 வயதுடையவர் எனவும் இனம்காணப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலில் 54 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி, இவான் டூக் (Ivan Duque) தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.