மெக்சிகோவில் வெடித்து தீப்பிடித்த பெட்ரோல் குழாய்:20 பேர் பலி

Print lankayarl.com in உலகம்

மெக்சிகோவில் எரிபொருள் ஒன்று வெடித்து தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

குழாய்கள் மூலம்மே மெக்சிகோவில் பெட்ரோல் எடுத்துச்செல்லப்படுகிறது.ஹிடால்கோ மாகாணத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி வெடித்ததிலேயே இவ் விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர்