விஜய் மல்லையா மீண்டும் மனுதாக்கல்

Print lankayarl.com in உலகம்

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது


ஆனால் விஜய் மல்லையா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அம்மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிதாக மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு ஒரு வாரம் அவகாசதை இங்கிலாந்து ஐகோர்ட் வழங்கியது .

இதன்படி , புதுப்பித்தல் மனுவை விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ளார். அம்மனு, உரிய நேரத்தில் வாய்மொழி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று ஐகோர்ட்டு அதிகாரி ஒருவர் கூறினார். வாய்மொழி விசாரணை அடிப்படையில், மனுவை முழுமையான விசாரணைக்கு அனுப்புவது பற்றி நீதிபதி முடிவு செய்வார்.