பாகிஸ்தானில் வெள்ளம்; 7 பேர் பலி

Print lankayarl.com in உலகம்

பாகிஸ்தான் கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்ட சித்ரால் மாவட்டத்தில் டேனின் கிராமத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கற்கள் மற்றும் கழிவுகள் உருண்டோடி வந்து வீடு ஒன்றின் மீது விழுந்தன. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இங்கு பல நகரங்களில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் நிலச்சரிவுகளும் மற்றும் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது