தாய்வானில் ஒரே பாலின திருமனத்திற்கான வாக்கெடுப்பு!

Print lankayarl.com in உலகம்

ஓரே பாலினத் திருமணத்தை சட்டபூர்வமாக்குவதற்கு ஆசியாவில் முதல் இடம் வேண்டுமா என்று தாய்வானில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஓரே பாலினத் திருமணத்திற்கு ஆதரவாக திர்ப்பளித்திருந்ததுடன் இது குறித்து சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது புதிய சட்டம் ஒன்றை அமுல்படுத்தவோ பாராளுமன்றத்திற்கு 2 வருட அவகாசம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பெரும்பாலான மக்கள் இந்த மாற்றத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இது குறித்து இரண்டு விதமான வாக்கெடுப்புக்கள் நடைபெறவுள்ளன.

பழமைவாத குழுவினர் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடைபெறுகின்ற திருமணத்தையே சட்டபூர்வமானதாக வரையறுக்கமாறு கோருகின்றனர். அதே நேரம் எல்.ஜி.பி.ரி செயற்பாட்டாளர்கள் ஒருவர் இரண்டு பாலினத்தவர்களில் எவரையேனும் திருமணம் செய்யக்கூடிய சமமான திருமன உரிமையை சட்டபூர்வமாக்கும் படி கோருகின்றனர்.

தாய்வான் பொது கருத்துக்கணிப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை 77 சதவீதமான மக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கம் இடையிலான திருமணத்தையே சட்டபூர்வமாக்க வலியுறுத்துவதாக கூறியுள்ளது.