காலநிலை மாற்றம் அமெரிக்கர்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: ஆய்வுகள் எச்சரிக்கை

Print lankayarl.com in உலகம்

சோதிக்கப்படாத காலநிலை மாற்றங்கள் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் செலவினத்தை ஏற்படுத்துவதோடு சுகாதாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பாரிய சவாலாக அமையும் என்று அமெரிக்க அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று எடுக்கப்படுகின்ற முடிவுகளிலேயே காலநிலை மாற்றத்தின் நாளைய சவால்கள் தங்கியுள்ளன என்று நான்காவது தேசிய காலநிலை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றமானது மனித ஆரோக்கியம், பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதார வளர்ச்சி வீதம் அகியவற்றுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் வாசிங்டன் நகரில் பனிப்பொழிவு ஏற்பட்ட போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புவி வெப்பமடைதலுக்கு என்ன நடந்தது? என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தற்போது ஜனாதிபதியைக் குறிப்பிடாமல் அவருடைய விஞ்ஞானிகள் அவருடைய கேள்விக்கு விரிவாக பதிலளித்துள்ளனர்.

அமெரிக்காவில் புவி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது ஏற்கனவே மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இது பேராபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்