பாரிஸில் அதிக பணம் கேட்ட போலி டாக்ஸி ட்ரைவர் சிறை!

Print lankayarl.com in உலகம்

விமான நிலையத்தில் இருந்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்ததற்காக சுற்றுலா வந்த ஒரு ஜோடியிடம் 247 யூரோ கேட்ட போலி டாக்ஸி டரைவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுற்றுலா ஜோடிக்கும் கார் ட்ரைவருக்கும் இடையில் நிகழ்ந்த இந்த தகராறின் வீடியோவானது நவம்பர் 9 ஆம் திகதி யூ ரியூப்பில் பதிவேற்றப்பட்டு பெரும் வைரலானது.

சென்ரல் பாரிஸில் உள்ள சாள்ஸ் டி குவல்லே விமான நிலையத்தில் இருந்து தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு செல்வதற்காக குறித்த தம்பதியினர் டாக்ஸி பிடித்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து குறித்த ஹோட்டலுக்கு செல்வதற்கு டாக்ஸியின் பொதுவான விலை 45 யூரோக்கள் மட்டுமே.

ஆனால் 25 வயது நிரம்பிய குறித்த டாக்ஸி ட்ரைவர் 247 யூரோ தருமாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த தம்பதியினர் அந்த தொகையை கொடுக்க மறுத்ததனால் அவர்களை காருக்குள்ளேயே வைத்து பூட்டியுள்ளதுடன் வெளியே விட மறுத்துள்ளார்.

பாரிஸ் நீதிமன்றத்தில் மோசடி, மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற வழக்குகளில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு டாக்ஸி ட்ரைவர் 8 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன