பெனின் கலைப்படைப்புக்கள்:

Print lankayarl.com in உலகம்

சிம்மாசனங்களையும் சிலைகளையும்
பிரான்ஸ் மீள ஒப்படைக்கிறது!

காலணிய ஆட்சிக்காலத்தில் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 26 கலைப்படைப்புக்களை பிரான்ஸ் மீள ஒப்படைக்கவுள்ளதாக அந் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மியூசியத்தில் உள்ள ஆபிரிக்க பொக்கிஷங்கள் மீளவும் அவை தோன்றிய நாட்டுக்கே ஒப்படைக்கப்படல் வேண்டும் என நிபுணர்களின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த 26 சிம்மாசனங்களும் சிலைகளும் 1892 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதய தகோமி இராச்சியத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காலணிய யுத்தத்தில் கொண்டுவரப்பட்டவையாகும்.

இவை தற்போது பிரான்ஸின் பிரான்லி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று பிரான்ஸ் மியூசியத்தில் அபிரிக்க கலைப்பொருட்களை காட்சிக்கு வைத்திருப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான தனது அறிக்கையினை வெள்ளிக்கிழமை சமர்ப்பித்திருந்தது. இதில் அவர்கள் பிரான்ஸ் மியூசியத்தில் உள்ள ஆபிரிக்க பொக்கிஷங்கள் மீளவும் அவை தோன்றிய நாட்டுக்கே ஒப்படைக்கப்படல் வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.

கலைப்படைப்புக்கள் கால தாமதம் இன்றி மீள ஒப்படைக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.