சிரியாவின் முக்கிய வானொலித் தொகுப்பாளர்; ரேயிட் பெயர்ஸ் சுட்டுக் கொலை

Print lankayarl.com in உலகம்

சிரியாவின் இப்லிப் மாகானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் சிரியாவின் முக்கிய வானொலித் தொகுப்பாளர்; ரேயிட் பெயர்ஸ் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நன்கு அறியப்பட்ட சிரிய செயற்பாட்டாளரான ரேயிட் பெயர்ஸ் இப்லிப் மாகானத்தில் உள்ள கப்ரான்வெல் நகரத்தில் கலவரம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரேயிட் பெயர்ஸ் சிரியாவில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்துகொண்டு சுயாதீனமாக வானொலி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது செயற்பாடுகள் சிரிய அரசாங்கம் மற்றும் போராளிகள் இருவரினதும் கோபத்தை சம்பாதித்திருந்தது.

இவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை முதலாவது தடவை அல்ல.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு போராளிகள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.