அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றுகூடுங்கள்: முஸ்லீம்களை அழைக்கிறார் ஈரான் பிரதமர்

Print lankayarl.com in உலகம்

குற்றவாழிகளுக்கு சிகப்புக் கம்பளம் விரிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவுக்கு எதிராக உலகில் உள்ள எல்லா முஸ்லீம்களையும் ஒன்று கூடுமாறு சனிக்கிழமை அன்று ஈரானிய பிரதமர் ஹஸான் ரௌஹானி அழைத்துள்ளார்.

2015 ஆம் அண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடனான சர்வதேச அணு உடன்படிக்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மே மாதம் வாஷிங்டன் டெஹ்ரான் மீதான தடைகளை மீண்டும் அமுல்படுத்தியது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு கீழ்ப்படிவது நமது மதத்திற்கு எதிரானது. இந்த நாட்டின் எதிர்கால தலைமறைகளுக்கு எதிரானது என்று டெஹ்ரானில் இஸ்லாமிய ஒற்றுமை பற்றிய ஒரு சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையில் ரௌஹானி தெரிவித்தார்